கொரோனாவை கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை செய்யும் முடிவில் அரசு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

 

கொரோனாவை கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை செய்யும் முடிவில் அரசு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

இதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. 

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸால் லட்ச  கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாதது அச்சத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா மூலம், கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழகம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது. 

ttn

இந்நிலையில் இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதிகேட்டுள்ளதாகவும் மத்திய அரசு மருத்துவகுழு வல்லுனர்களுடன் ஆலோசித்து விரைவில் அதன் முடிவை வழங்குவதாக கூறியதாகவும் தெரிவித்தார். அப்படி அந்த சிகிச்சைக்கு மருத்துவக்குழு அனுமதி வழங்கினால், கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய மருத்துவக் குழு தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், மக்கள் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை எதிர்த்து போராட முடியும் என்றும் கூறினார்.