கொரோனாவை கட்டுக்குள் வைத்த கேரளா! – சாதித்தது எப்படி?

கொரோனாவை கட்டுக்குள் வைத்த கேரளா! – சாதித்தது எப்படி?

இன்று இந்தியாவிலேயே மிகக் குறைவான கொரோனா உயிரிழப்பு விகிதம் உள்ள மாநிலம் கேரளாவாக உள்ளது. வயதானவர்களுக்குத்தான் அதிகம் கொரோனா ஏற்படும், அதுவும் மிகவும் வயதானவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்பட்ட நிலையில் 90ஐ தொட்ட தம்பதிகளை நல்ல முறையில் கவனித்து வீட்டுக்கு அனுப்பியது கேரளா. 

கேரள அரசின் ஒட்டுமொத்த நடவடிக்கை காரணமாக கேரளாவில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவும் குணமடைந்து வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவிகிதம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார்கள் என்று கேரளா அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் கூறுகிறது.

corona-in-kerala-78

இது எப்படி சாத்தியம் என்று கேட்டபோது, “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்பட்டன. ஆங்கில மருந்துகளுடன் ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படுகிறது. இது நல்ல பலனை அளிக்கிறது” என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கேரளா பின்பற்றிய வழிகளை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால் விரைவில் கொரோனாவில் இருந்து நாடு தப்பிக்கும்!