கொரோனாவை எதிர்க்க உலக மக்கள் ஒன்றுபட வேண்டும் – தலாய் லாமா

 

கொரோனாவை எதிர்க்க உலக மக்கள் ஒன்றுபட வேண்டும் – தலாய் லாமா

கொரோனாவை எதிர்க்க உலக மக்கள் ஒன்றுபட வேண்டும் என தலாய் லாமா கூறியுள்ளார்.

திபெத்: கொரோனாவை எதிர்க்க உலக மக்கள் ஒன்றுபட வேண்டும் என தலாய் லாமா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை காரணமாக நெருக்கடியால் எழுந்த சவால்களை முறியடித்து அதை வெல்ல ஒருங்கிணைந்த, உலகளாவிய ஆதரவை வழங்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கூறினார். கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் பொருளாதார சீர்குலைவு அரசாங்கங்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், மக்கள் வாழ்வதற்கான திறனை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Dalai lama

இந்த நெருக்கடியும் அதன் விளைவுகளும் ஒரு ஒருங்கிணைந்த, உலகளாவிய ஆதரவு மூலம் ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே நாம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க முடியும். நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்” என்று கூறிய அவர் அதற்கான பிரார்த்தனையை தான் செய்து வருவதாக தெரிவித்தார்.

நெருக்கடியான இந்த நேரத்தில் நாம் பல நண்பர்களை, குடும்பத்தினரை இழந்துள்ளோம் அத்துடன் உடல்நலம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். பொருளாதார சீர்குலைவு அரசாங்கங்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. மேலும் பல மக்கள் வாழ்வதற்கான திறனை இழந்துள்ளனர்என்று அவர் கூறினார்.