கொரோனாவை எதிர்கொள்ள நெஞ்சுறுதி இல்லாத மோடி அரசு! – ப.சிதம்பரம் விமர்சனம்

 

கொரோனாவை எதிர்கொள்ள நெஞ்சுறுதி இல்லாத மோடி அரசு! – ப.சிதம்பரம் விமர்சனம்

கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. பாதிப்பு பற்றி எச்சரிக்கைவிடுத்த போது சிரித்த மத்திய அமைச்சர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசுக்கு நெஞ்சுறுதி இல்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. பாதிப்பு பற்றி எச்சரிக்கைவிடுத்த போது சிரித்த மத்திய அமைச்சர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பொது மக்கள் கொரோனாவை எதிர்கொள்ள எந்த ஒரு பொருளாதார உதவியை அறிவிக்காமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பலரும் வேலையை இழக்கும் சூழ்நிலை, சம்பளம் இழக்கும் சூழ்நிலை வரவே, 1.5 லட்சம் கோடி அளவுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது.

narendra-modi-89

ஆனால், அந்த நிவாரணம் பெறுபவர்கள் பட்டியலில் பலரும் விடுபட்டனர். இ.எம்.ஐ தள்ளுபடி உள்ளிட்ட சில சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனால், அதற்கு அநியாய வட்டி போட்டு வசூலிக்க வங்கிகள் தங்களுக்கு சாதகமாக அதை பயன்படுத்திக்கொண்டுள்ளன.
இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அதில், “25-3-2020 ஆம் நாள் அன்று ரூ1 லட்சம் கோடி நிவாரணத்தைத் திட்டத்தை  அறிவித்து விட்டு, அந்தப் பணத்தையும் இன்னும் மக்களுக்குச் சேர்க்காமல், மத்திய அரசு கையை விரித்துவிட்டது.
முதல் அறிவிப்பில் விடுபட்ட பிரிவுகளுக்கு (அவர்கள் ஏராளம்) நிவாரணமே கிடையாதா? இந்தப் பாரபட்சத்தைத் தட்டிக் கேட்க வேண்டாமா?
இந்தத் தொற்று நோயைப் போராடி வெல்லுவதற்கு பல லட்சம் கோடி ரூபாயும் நெஞ்சுறுதியும் வேண்டும். இவை இரண்டும் அரசிடம் குறைவாக இருப்பதைப் போல் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.