கொரோனாவைரஸால் ரூ.3.16 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 807 புள்ளிகள் வீழ்ச்சி…

 

கொரோனாவைரஸால் ரூ.3.16 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 807 புள்ளிகள் வீழ்ச்சி…

கொரோனாவைரஸ் உள்ளிட்ட காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 807 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

சீனாவில் தீவிரவமாக பரவி வரும் கொரோனாவைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை குறைத்து தங்கம் மற்றும் டாலர் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய தொடங்கியது. கடந்த டிசம்பர் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களின்  பங்குகள் விலை இன்று இன்று ஒட்டு மொத்தமாக சரிந்தன.

பரவும் கொரோனாவைரஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 748 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,769 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 181 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.155.33 லட்சம் கோடியாக சரிந்தது. இதனால் இன்று ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.3.16 லட்சம் கோடியை இழந்தனர்.

இன்போசிஸ்

இன்றைய வர்த்தகத்தின், முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 806.89 புள்ளிகள் குறைந்து 40,363.23 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 251.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,829.40 புள்ளிகளில் முடிவுற்றது.