கொரோனாவைத் தடுக்க மாஸ்க் வேண்டாம்… பிரார்த்தனை போதும்! – பிரகாஷ் ஜவடேகர் சொல்கிறார்

கொரோனாவைத் தடுக்க மாஸ்க் வேண்டாம்… பிரார்த்தனை போதும்! – பிரகாஷ் ஜவடேகர் சொல்கிறார்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பீதி போலியாக உருவாக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படி சிகிச்சை பெற்றவர்கள் பூரண நலம் பெற்று வீடுகளுக்கும் திரும்பி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாஸ்க் தேவையில்லை, பிரார்த்தனை செய்தாலே போதும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

prakash-javadekar-90

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய பீதி போலியாக உருவாக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படி சிகிச்சை பெற்றவர்கள் பூரண நலம் பெற்று வீடுகளுக்கும் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவது போன்ற தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஹோலி பண்டிகையில் கூட பங்கேற்கப் போவது இல்லை என்று மோடி அறிவிக்கவே, பீதி எல்லோருடைய மனதிலும் தோன்றிவிட்டது.

yogi

இந்த நிலையில், யோகா செய்தால் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பசு கோமியம் மற்றும் சானத்தை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என்று அஸ்ஸாம் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ பேசினார். இவர்கள் வரிசையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் இணைந்துள்ளார்.
மத்திய சுற்றச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றியும் பீதி காரணமாக மாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மாஸ்க் அணிவது மட்டும் இதற்கான தீர்வு இல்லை. சொல்லப்போனால் அனைவருக்கும் மாஸ்க் தேவையில்லை. உங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பொது இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். வைரஸ் தொற்று ஏற்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.