கொரோனாவைக் காட்டி கொள்ளை: ரூ.600க்கு ஆர்.டி.பி வாங்கிய தமிழகம்! – அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

கொரோனாவைக் காட்டி கொள்ளை: ரூ.600க்கு ஆர்.டி.பி வாங்கிய தமிழகம்! – அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கொரோனாவை காரணம் காட்டி கொள்ளையடிக்கும் போக்கில் ஆளும் அ.தி.மு.க அரசு ஈடுபட்டுள்ளது, ரூ.337க்கு வாங்கு வாங்கி ரேப்பிட் டெஸ்ட் கிட்டை தமிழக அரசு ரூ.600-க்கு வாங்கியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களை சேகரித்து அது தொடர்பாக வழக்கு தொடர்ந்து வரும் அமைப்பு அறப்போர் இயக்கம். இது பொது வெளியிலும் ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ள ரேப்பிட் டெஸ்ட் கிட் விலை தொடர்பான பகீர் தகவலை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் லட்சக்கணக்கில் Rapid Testing kits வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் பல்வேறு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளனர். ஆனால் ஒரு முறை கூட என்ன விலையில் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. 

vijayabaskar-beela-rajeh

அறப்போர் இயக்கத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி தமிழக அரசு ஒரு Rapid Testing kit 600 ரூபாய்+Gst செலவில் வாங்கியுள்ளதாக தெரிகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ஒரு kit 337 ரூபாய்+Gst விலையில் வாங்கி இருக்கும் போது கிட்டத்தட்ட அதை விட இரண்டு மடங்கு அதிக விலைக்கு தமிழகம் அதே பொருளை வாங்குவது ஏன்?
இது போன்ற சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அறப்போர் இயக்கம் ஆரம்பம் முதல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் இதை ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்து வந்தனர். அவர்கள் அலட்சியம் செய்வதற்கான காரணம் தற்பொழுது வெளிவரத் துவங்கியுள்ளது. உடனடியாக தமிழக அரசு இது வரை வாங்கியுள்ள Rapid Testing kits மற்றும் PCR testing kits விலைகள் மற்றும் அவை வாங்கப்பட்ட இடம், தேதி மற்றும் அதன் specification போன்ற விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க அறப்போர் இயக்கம் பொது மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறது” என்று கூறியுள்ளது.