’கொரோனாவைக் கட்டுபடுத்தாத அதிபரே பதவி விலகு’ மெக்சிகோவில் தீவிரமடையும் போராட்டம்

 

’கொரோனாவைக் கட்டுபடுத்தாத அதிபரே பதவி விலகு’ மெக்சிகோவில் தீவிரமடையும் போராட்டம்

கொரோனா கோரப்பிடியில் உலகம் சிக்கித் தவிக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே புதிய நோயாளிகள் அதிகரிப்பதைக் கட்டுபடுத்த கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆயினும் ஒருநாள் குறையும் எண்ணிக்கை அடுத்த நாள் அதிகரித்துவிடுகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 12 லட்சத்து  39 ஆயிரத்து 588 பேர்.  கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்து 523 நபர்கள்.

’கொரோனாவைக் கட்டுபடுத்தாத அதிபரே பதவி விலகு’ மெக்சிகோவில் தீவிரமடையும் போராட்டம்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 65 ஆயிரத்து 065 பேர்.  தற்போது அமெரிக்காவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்துவிட்டது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் மெக்சிகோ நாடு 7-ம் இடத்தில் உள்ளது. இன்று வரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 663 பேர் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை. இவர்கலில் சிகிச்சை பலனால் 4 லட்சத்து 99 ஆயிரத்து 302 பேர் குணம் பெற்று விட்டனர்.

’கொரோனாவைக் கட்டுபடுத்தாத அதிபரே பதவி விலகு’ மெக்சிகோவில் தீவிரமடையும் போராட்டம்

சிகிச்சை பலனிக்காமல் 73,493 பேர் இறந்துவிட்டனர். மற்ற நாடுகளைப் பார்க்கையில் இறப்பு விகிதம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மெக்சிகோவில் உள்ளது. ஆம். உலகளவில் 4 சதவிகிதமாக இருக்கும் இறப்பு விகிதம் மெக்சிகோவில் 13 சதவிகிதமாக உள்ளது.

இதனால், அந்த நாட்டு பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்காமல், அதிகளவில் பாதிப்பு ஏற்பட விட்டுவிட்டதாகவும் பொருளாதார சரிவைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் செய்ய வில்லை என்றும் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மனுவெல் லோபஸ் ஒப்ராடோர் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

’கொரோனாவைக் கட்டுபடுத்தாத அதிபரே பதவி விலகு’ மெக்சிகோவில் தீவிரமடையும் போராட்டம்

தொடக்கத்தில் வெறும் முணுமுணுப்பாக இருந்த இந்தக் குற்றச்சாட்டுகள் தற்போது பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. மெக்சிகோவில் முக்கியமான இடங்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடி, அதிபரை பதவி விலகக்கோரி கோஷமிட்டு போராடி வருகின்றனர்.

கொரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் இந்தப் போராட்டங்கள் அந்நாட்டுச் சூழலை இன்னும் மோசமாக்கி விடும் என்று அச்சப்படுகின்றனர்.