கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பிரபல நிறுவனம்: வரும் 2021 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது!

 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பிரபல நிறுவனம்: வரும் 2021 முதல் பயன்பாட்டுக்கு வருகிறது!

கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   

 கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 8 லட்சத்து 57ஆயிரத்து 487  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது
 இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.   

tt

இந்நிலையில் கொரோனா வைரசை தடுக்கும் மருந்து பரிசோதனை இன்னும் ஒரு சில மாதங்களில் வெற்றிபெற்று அடுத்த ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் ஜான்சன் அண்ட்  ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.  சீனா, இத்தாலி, பிரேசில் என பல வளர்ந்த நாடுகள் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. 

tt

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களில் ஒன்றான ஜான்சன் அன் ஜான்சன் கடந்த 3 மாதங்கள் நடந்த கொரோனாவுக்கு துல்லியமான  மருந்து கண்டுபிடிப்பில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது முதலில் எலிக்கு கொடுத்து பரிசோதனை நடத்தியதில் வெற்றி பெற்றதாகவும் ,வரும் செப்டம்பர் மாதம் மனிதனுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தவுள்ளதாகவும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த மருந்துக்கு உரிய அங்கீகாரம் வாங்கி பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

tt

இனிவரும் காலங்களில் கொரோனா நோயால் ஒரு உயிர்கூட போகாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது . இதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.