கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி! – ஜாக்கி ஜான் அறிவிப்பு

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி! – ஜாக்கி ஜான் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000த்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 

கொடிய கொரோனா வைரஸ் கிருமிக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு தன் பங்காக ரூ.1 கோடி வழங்குவதாக நடிகர் ஜாக்கி ஜான் அறிவித்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000த்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஆயிரக் கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. 

கொரோனா வைரஸ்

உலகம் முழுக்க உள்ள ஆராய்ச்சி அமைப்புக்கள் கொரோனா வைரஸ் கிருமியை பிரித்தெடுக்கவும், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சில நாடுகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையுடன் சாதாரண ஃப்ளு காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்தைச் சேர்த்து வழங்கினால் கொரோனா வைரஸ் காய்ச்சல் குணமாவதாக தெரிவித்துள்ளன. இருப்பினும் அவரவர் உடல்நிலை, நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே கொரோனா வைரஸில் இருந்து விடுபடுவது சாத்தியம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரபல நடிகர் ஜாக்கி ஜான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்) அளிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அறிவியலும் தொழில் நுட்பமும்தான் வைரஸ் கிருமியை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம். பலரும் என்னைப் போன்ற கருத்தைக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படம் என்று நம்புகிறேன். இந்த கிருமிக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு நான் நன்றி கூறி அவர்களுக்கு ஒரு மில்லியன் யென் வழங்குவேன்” என்று கூறினார்.