“கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி” : எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு!

 

“கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி” : எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்ட வெற்றி அடைந்துள்ளதாக எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், 180க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் பரவ ஆரம்பித்து கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையிலும் இதுவரை இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்ட வெற்றி அடைந்துள்ளதாக எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

tn

இது குறித்து பேசிய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யன், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அமெரிக்கா தடுப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாகவும், இந்த கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்துக்கு சென்றால் கொரோனாவை தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்னும் முறையில் கொரோனா வைரஸை எதிர்க்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தோல்வி அடைந்து வரும் நிலையில்,எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் முதற்கட்ட வெற்றியை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.