கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தை நாடும் தமிழக அரசு!

 

கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தை நாடும் தமிழக அரசு!

சீனாவில் வுகான் மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த வைரஸால் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 2 லட்சத்து 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் கொரோனாவுக்கு 40 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு  முறையான மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ்

இந்நிலையில் வைஷ்ணவா மற்றும் லயோலா கல்லூரிகளில் உள்ள 70 கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளுக்கு சித்த மருத்துவர் வீரபாகு பரிந்துரைத்த மருந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த 70 பேருக்கும் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு அவர் கொடுக்கும் மருந்து நல்ல முடிவைத் தரும் பட்சத்தில் அதனை அங்கீகரிக்க அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் அலோபதி மருத்துவ முறையும் தொடரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது . 

corona patient

ஏற்கனவே சித்த மருத்துவர் வீரபாகு டெங்கு காய்ச்சல் பரவியபோது 2012ஆம் ஆண்டு நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார் . இந்தநிலையில் ஆயுர்வேதம், சித்தா ஆகியவற்றை கலந்து இவர் புதிய கசாயம் ஒன்றை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 70 நோயாளிகளுக்கு கொடுத்து வருகிறார். அவர்களுக்கு பிசிஆர் டெஸ்ட் செய்யப்படும் பட்சத்தில் நல்ல பலனை தந்தால், அதை ஏற்க அரசு தயாராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது