கொரோனாவுக்கு குட்பை: எய்ட்ஸ், ஃப்ளு தொற்று மருந்தால் குணமான தாய்லாந்து கொரோனா நோயாளி!

 

கொரோனாவுக்கு குட்பை: எய்ட்ஸ், ஃப்ளு தொற்று மருந்தால் குணமான தாய்லாந்து கொரோனா நோயாளி!

இருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 
கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு பீதியைக் கிளப்பியதோ, அதே அளவுக்கு கோரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று புதிது புதிதாக கிளம்பிய ஆராய்ச்சியாளர்களைக் கண்டும் மக்கள் பீதியடைந்துவருகின்றனர்.
கொ

எய்ட்ஸ் மற்றும் ஃப்ளு தொற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் மூலம் தாய்லாந்தில் மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 
கொரோனா பாதிப்பு எந்த அளவுக்கு பீதியைக் கிளப்பியதோ, அதே அளவுக்கு கோரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று புதிது புதிதாக கிளம்பிய ஆராய்ச்சியாளர்களைக் கண்டும் மக்கள் பீதியடைந்துவருகின்றனர்.

virus image

கொரோனா வைரஸ் தொற்று தற்போதுதான் உருவாகியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கியதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவிலிருந்து திரும்பியவர்கள் மூலமாக இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. அந்த வைரஸ் எப்படி இருக்கும், என்ன மருந்துக்கு கட்டுப்படும் என்று இப்போதுதான் ஆராய்ச்சியே தொடங்கியுள்ளது. ஆனால், அந்த வைரஸ் கிருமி பற்றி ஏதும் தெரியாமல், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று பலரும் கதைவிட்டு வருகின்றன.

corona-patient

இந்த நிலையில் உண்மையில் மருந்து இருப்பதாக தாய்லாந்து மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தாய்லாந்தில் 71 வயதான மூதாட்டி ஒருவருக்கு கொரோனா பாசிடிவ் வந்தது. தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த முதலில் எச்.ஐ.வி எய்ட்ஸ் மருந்துகளை அந்த மூதாட்டிக்கு செலுத்திவந்துள்ளனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. படுத்த படுக்கையாக மாறிவிட்டார்.
இதனால், சிகிச்சையில் சிறிது மாற்றம் செய்ய முடிவு செய்தனர். எய்ட்ஸ் மருந்துடன், ஃப்ளு வைரஸ் தடுப்பு மருந்தையும் செலுத்தினர். அடுத்த 48 மணி நேரத்தில் மூதாட்டியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எழுந்து அமரும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவே மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அவரது ரத்தத்தை மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பியபோது, கொரோனா நெகட்டிவ் அதாவது, அவரது உடலில் கொரோனா வைரஸ் இல்லை என்று வந்துள்ளது. மேலும், அவரது சுவாசப் பாதையிலும் நோய்த் தொற்று இல்லை என்று கண்டறிந்தனர். இருப்பினும் தொடர் கண்காண்பில் இந்த மூதாட்டி வைக்கப்பட்டுள்ளார். தாய்லாந்து மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.