“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்!” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்

 

“கொரோனாவுக்கு எதிர்த்து நாம் நிச்சயம் வெல்வோம்!” – பாசிடிவ் எண்ணம் பகிரும் கபில்தேவ்

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் நிச்சயமாக வெல்வோம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

மும்பை: கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் நிச்சயமாக வெல்வோம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ரெயில், விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் இந்தியாவின் ஊரடங்கு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பேசுகையில், “நீங்கள் வீட்டில் தங்க வேண்டும். எனவே, வீட்டிலேயே இருங்கள். உயிருக்கு ஆபத்தான இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு திறமையான மற்றும் பொருத்தமான அதிகாரிகளுக்கு உதவ இதுவே குறைந்தபட்ச உதவியாக இருக்கும். இந்த சூழலை நேர்மறையான வழியில் பயன்படுத்தலாம்.

kapil

இந்த சூழலை ஏற்றுக் கொள்ள உங்களை நீங்களே சவால் செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்குள் தான் உண்மையான உலகம் இருக்கிறது – அது உங்கள் குடும்பம். புத்தகங்கள், டிவி, இசை மூலம் நீங்கள் பொழுதைபோக்கும் வழிமுறைகள் உள்ளன. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் வைத்திருக்கும் தொடர்பு தான் மிகச் சிறந்தது. கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெல்வோம் என்று எனக்கு தெரியும்” என்றார்.