கொரோனாவுக்கு எதிரான INO – 4800 தடுப்பூசி இன்று பரிசோதனை..வெற்றி பெறுமா? உற்று நோக்கும் உலக நாடுகள்!

 

கொரோனாவுக்கு எதிரான INO – 4800 தடுப்பூசி இன்று பரிசோதனை..வெற்றி பெறுமா? உற்று நோக்கும் உலக நாடுகள்!

பல நாடுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டு பிடிப்பதில் தொய்வின்றி போராடி வருகின்றன. 

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாள் தோரும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். உலக அளவில் 13,48,628 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 74,816 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரமான வைரஸ் தாக்குதலால் இத்தாலி, அமெரிக்கா,ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகள் கூட இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. இருப்பினும், பல நாடுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டு பிடிப்பதில் தொய்வின்றி போராடி வருகின்றன. 

ttn

அந்த வகையில் அமெரிக்காவின்,  ஃபிலடெல்பியா மாகாணத்தில் உள்ள பில்கேட்ஸ் அறக்கட்டளையும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் அந்த அறக்கட்டளையின் சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அதற்கு  INO – 4800 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி இன்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. 

ttn

அதற்காக அந்த ஆராய்ச்சி மையமே 40 பேரை தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு 4 வார இடைவெளியில் இந்த தடுப்பூசி போடப்படும் என்றும் இது வெற்றி பெற்றால் உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி சோதனை வெற்றி பெறுமா என உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்கா தயாரித்துள்ள 2ஆவது தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது.