கொரோனாவுக்கு அமெரிக்கா பயன்படுத்திய ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை இந்தியாவும் பயன்படுத்த திட்டம்!

கொரோனாவுக்கு அமெரிக்கா பயன்படுத்திய ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை இந்தியாவும் பயன்படுத்த திட்டம்!

கொரோனா தொற்றுள்ளோருக்கு ஹெச்.சி.க்யூ எனப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ந்து வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா தொற்றுள்ளோருக்கு ஹெச்.சி.க்யூ எனப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் தொடர்ந்து வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுள்ளோருக்கு ஹெச்.சி.க்யூ மாத்திரைகள் பலன் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியான நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய நோயாளிகளிடம் இம்மாத்திரையை கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

hydroxychloroquine

தற்போதைய சூழலில் ஹெச்.சி.க்யூ மாத்திரைகள் முழு பலன் தரும் என்றோ அல்லது முற்றாக பலன் தராது என்றோ முடிவுக்கு வந்துவிட முடியாது என்றும் இது குறித்து நடந்து வரும் ஆய்வுகள் மற்றும் பிற நாடுகளின் புள்ளிவிவரங்களை யும் பரிசீலித்த பின்னரே இது குறித்த திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஹெச்.சி.க்யூ மருந்தை இந்தியா தற்போது ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது