கொரோனாவுக்காக டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

 

கொரோனாவுக்காக டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது! சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸால் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக அரசு, மக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதனொரு பகுதியாக டாஸ்மாக் பார்களையும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. 

chennai high court

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கில் தன்னையும் சேர்க்க கோரி வழக்கறிஞர் முருகன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் உலக சுகாதார நிறுவனம் குடிப்பழக்கத்தை ஒரு நாள்பட்ட நோயாக வகைப்படுத்தியுள்ள நிலையில், ஒரே நாளில் குடிப்பழக்கத்தை நிறுத்துவது  விபரீதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கடைகளையும் மூடினால் அது கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.