கொரோனாவில் இருந்து குணமாவோர் விகிதம் 25.19 சதவீதமாக அதிகரிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம்

 

கொரோனாவில் இருந்து குணமாவோர் விகிதம் 25.19 சதவீதமாக அதிகரிப்பு – மத்திய சுகாதார அமைச்சகம்

கொரோனா தொற்றுநோயிலிருந்து குணமாவோர் விகிதம் 25.19 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

டெல்லி: கொரோனா தொற்றுநோயிலிருந்து குணமாவோர் விகிதம் 25.19 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 32 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

covid 19

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து மீண்டு, சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் விகிதம் 25.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 14 நாட்களுக்கு முன்பு 13 சதவீதமாக இருந்தது. ஆக இது மிகப்பெரிய முன்னேற்றம் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 8,324 நோயாளிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் இதுவரை 1,074 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 33,050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.