கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்.. கைத்தட்டி உற்சாகமாக அனுப்பி வைத்த மருத்துவக்குழு!

 

கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்.. கைத்தட்டி உற்சாகமாக அனுப்பி வைத்த மருத்துவக்குழு!

உலக அளவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 59 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் உலக அளவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 59 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நபர்களுள் 5% மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பலர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். ஆனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பிழைப்பது கடினம். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள், நாம் உயிர் பிழைக்க மாட்டோம் என்று வருத்தத்தில் இருக்கின்றனர். 

ttn

இங்கிலாந்தின் லிசெஸ்டர் நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று குணமடைந்துள்ளார். அதனால் அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்த மருத்துவக்குழு இரு பக்கமும் நின்று கைத்தட்டி, உற்சாகமாக அவரை அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.