கொரோனாவிலிருந்து காப்பாற்றிய மருத்துவரின் பெயரை தனது மகனுக்கு சூட்டியுள்ள பிரிட்டன் பிரதமர்!

 

கொரோனாவிலிருந்து காப்பாற்றிய மருத்துவரின் பெயரை தனது மகனுக்கு சூட்டியுள்ள பிரிட்டன் பிரதமர்!

போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் கடந்த வாரம் புதன்கிழமை அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இத்தம்பதியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “29 ஆம் தேதி காலை லண்டன் மருத்துவமனையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது” என கூறினர். பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பிரதமரும் திருமதி சைமண்ட்ஸும் லண்டன் மருத்துவமனையில் ஆரோக்கியமான ஆண் குழந்தையின் பிறப்பை அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறார்கள். தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக உள்ளனர். பிரதம மந்திரி மற்றும் கேரி சைமண்ட்ஸ் அருமையான NHS மகப்பேறு குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறார்கள்” என்றார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் நேரத்தை செலவிட்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் திங்களன்று பணிக்கு திரும்பினார்.

போரிஸ் ஜான்சன்

இந்நிலையில் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோர் தங்கள் ஆண் குழந்தைக்கு வில்பிரட் லாரி நிக்கோலஸ் ஜான்சன் என்று பெயரிட்டுள்ளனர். போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு இரவுப்பகலாக சிகிச்சை அளித்தவர்கள் இரு மருத்துவர்கள். அவர்கள் நிக் பிரைஸ், நிக் ஹார்ட். மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குழந்தையின் நடுப்பெயர் நிக்கோலஸ் என பெயரிடப்பட்டிருப்பதாக பெயரை சூட்டியிருப்பதாக கேரி சைமண்ட்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பெயரின் முதல் பகுதியான வில்பிரட், ஜான்சனின் தாத்தா பெயர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.