கொரோனாவின் மறைமுக விளைவு……..6 மாதத்துக்குள் 1.5 லட்சம் ஐ.டி. பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்…..

 

கொரோனாவின் மறைமுக விளைவு……..6 மாதத்துக்குள் 1.5 லட்சம் ஐ.டி. பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்…..

கோவிட்-19ன் தாக்கத்தால் அடுத்த 3 முதல் 6 மாதத்துக்குள் 1.5 லட்சம் ஐ.டி. பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மனிதவள நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்திய ஐ.டி. துறையில் சுமார் 45 முதல் 50 லட்சம் பணியாளர்கள் வரை பணியாற்றுகின்றனர். இதில் டாப் 5 பெரிய நிறுவனங்களில் மட்டும் 10 லட்சம் பேர் வேலைபார்க்கின்றனர். அதேசமயம், சிறிய ஐ.டி. நிறுவனங்கள் 10 முதல் 12 லட்சம் பேருக்கு வேலை வழங்கி வருகின்றன. தற்போது தொற்றுநோய் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதால், பணியாளர்கள் கடுமையாக நெருக்கடியில் உள்ளனர். கோவிட்-19ஆல் அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்குள் 1.5 லட்சம் பணியாளர்கள் வேலையை இழக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் சிறிய ஐ.டி. நிறுவனங்கள்தான் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் என மனிதவள நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஐ.டி. பணியாளர்

கொரோனா வைரஸ் பரவுவதால் சுற்றுலா, விருந்தோம்பல் துறை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி துறை ஸ்தம்பித்து நிற்கிறது. நிறுவனங்களும் தங்களது செயல்பாடு வரும் காலாண்டுகளில் எப்படி இருக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளன. மேலும் பல நாடுகளில் லாக்டவுன் மே வரை நீடிக்கப்படலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நிச்சயமற்ற தன்மை முடிவுகளை பாதிக்கின்றன.

பேர்போர்ட்டல்

சிறிய ஐ.டி. நிறுவனங்கள் ஒவ்வொரு ப்ராஜெக்ட் குறையும்போதும் பணியாளர்களை நீக்க தொடங்கி விட்டன. உதாரணமாக சுற்றுலா துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஐ.டி.-பி.பி.ஓ. நிறுவனமான பேர்போர்ட்டல் சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டது. தனது வர்த்தகம் 85 சதவீதம் சரிவு கண்டபிறகே இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டது. இது குறித்து ஐ.டி. சங்கம் கூறுகையில், பேர்போர்ட்டல் நிறுவனம் 2 மணி நேர நோட்டீஸ் கொடுத்து பணியாளர்களை ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டது என தெரிவித்தது.