கொரோனாவின் கோரப்பிடியால் நிலைக்குலைந்த இத்தாலி!

 

கொரோனாவின் கோரப்பிடியால் நிலைக்குலைந்த இத்தாலி!

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. சீனாவில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. சீனாவில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸால் பல நாடுகளின் நிலை மோசமாகியுள்ள நிலையில், இத்தாலி மரணக்குழியில் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ttn

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், எங்கே பார்த்தாலும் கொத்துக் கொத்தாக சடலங்கள் கிடக்கின்றன. உறவினர்களின் மரணஓலங்களுடன், என்ன செய்வதென்று அறியாது விழிபிதுங்கியிருக்கிறது இத்தாலி. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கு இடமின்றியும் மாண்டவர்களின் உடலை புதைக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். குறிப்பாக மருத்துவர்கள் முறையான உறக்கமின்றி மக்களை காப்பாற்ற போராடி வருகின்றனர்.

ttn

நாளொன்றுக்கு 40 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை நிலவுகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை லேசாக எடுத்துக் கொண்டதால் இத்தகைய சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. விரைவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு வர வேண்டும் என்று அனைவரும் பிரார்தித்து வருகின்றனர்.