கொரோனாவின் கோரத் தாண்டவம்: மேலும் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி!

 

கொரோனாவின் கோரத் தாண்டவம்: மேலும் இரண்டு மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி!

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் கொரோனா பரவுவது பெரும் பீதியடைய செய்கிறது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸுக்கு முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றனர். அதே சூழலில் தான் இந்தியாவும் இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், பாதிப்பு இந்த அளவுக்கு இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் கொரோனா பரவுவது பெரும் பீதியடைய செய்கிறது. 

ttn

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த பெண் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை ESI மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வந்த இரண்டு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு மருத்துவர்களும் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.