கொரோனாவின் கோரத் தாண்டவம் .. பிரபல இந்திய சமையல் கலை நிபுணர் உயிரிழப்பு!

 

கொரோனாவின் கோரத் தாண்டவம் .. பிரபல இந்திய சமையல் கலை நிபுணர் உயிரிழப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், அமெரிக்காவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய சமையல் கலை நிபுணர் கடந்த புதன்கிழமை உயிரழந்துள்ளார். 

ttn

 மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த பிளாய்ட் கார்டோஸ்(59) இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல உணவகங்களை நடத்தி வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுள்ளார். அங்கு சென்ற சில நாட்களிலேயே இவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. அதனையடுத்து கார்டோஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவருக்கு காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ttn

அவர் இந்தியா வந்திருந்த போது, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், கொரோனா அறிகுறி இருந்தால் உடனே சிகிச்சை பெருமாறும் அவரது நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கும் தகவல் கொடுக்கபட்டுள்ளது.