‘கொரோனாவா இருக்குமோ’.. சந்தேகத்தில் மூலிகை சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் சிகிச்சை!

 

‘கொரோனாவா இருக்குமோ’.. சந்தேகத்தில் மூலிகை சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் சிகிச்சை!

கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே பீதி அதிகமாகியுள்ளது.

கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே பீதி அதிகமாகியுள்ளது. சளி, காய்ச்சல், வறட்டு இருமல் இருந்தால் கொரோனா இருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருவதால், காய்ச்சல் அறிகுறியை கூட மக்கள் கொரோனாவாக இருக்குமோ என்று எண்ணி அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கபடாதது, அச்சத்தை ஏற்படுத்தி  வருகிறது. தமிழக மக்கள் கொரோனவை தடுப்பதாக எண்ணி வீட்டு வாசலில் வேப்பிலை தோரணம் கட்டியும், வாசலில்  மஞ்சள் கலந்த நீரை தெளித்தும் வருகின்றனர்.

ttn

இந்நிலையில் மதுரையில் கொரோனா அச்சத்தில் மூலிகை மருந்து உண்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசலம்பட்டியை சேர்ந்த தாய்,மகன்கள் உள்ளிட்ட 3 பேர் கொரோனா அறிகுறி இருந்ததால், மூலிகை மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படவே அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று  வருகின்றனர்.