கொரோனாவால் 1 மீட்டர் இடைவெளியில் அமரவைத்து அன்னதானம் போட்ட திருப்பதி தேவஸ்தானம் 

 

கொரோனாவால் 1 மீட்டர் இடைவெளியில் அமரவைத்து அன்னதானம் போட்ட திருப்பதி தேவஸ்தானம் 

சீன நாட்டில் பரவத் தொடங்கி தற்போது, 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நாட்டின் பல கோவில்கள் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. குறிப்பாக பல கோவில்களில் இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tirupati devasthanam

இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100 க்கு மேற்பட்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கோவிலுக்குள் அனுமதித்து வருகின்றனர். கொரோனா பரவாமல் இருக்க திருப்பதி கோவிலில் சிறப்பு யாகமும் நடத்திவருகின்றனர்.

கொரோனா பீதி காரணமாக ஒரே நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய அன்னதானம் வழங்கும் இடத்தில் 1 மீட்டர் இடைவெளியில் அமரவைத்து பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகப்பட்டது. இதில் 500 பக்தர்கள் அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.  மேலும் அறைகள் பெறுவதற்கான சிஆர்ஓ அலுவலகம், பத்மாவதி விசாரணை மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.