கொரோனாவால் முடங்கிய வாழ்க்கை… ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்க முடியாமல் இருமி இருமி உயிரை விட்ட தொழிலாளி

 

கொரோனாவால் முடங்கிய வாழ்க்கை… ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்க முடியாமல் இருமி இருமி உயிரை விட்ட தொழிலாளி

கொரோனா பலரது வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. ரேஷனில் அரிசி, பருப்பு தருகிறோம், ரூ.1000ம் செலவுக்குத் தருகிறோம் இதைவிட வேறு என்ன வேண்டும் என்று அரசு கூறுகிறது. அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு உணவுத் தவிர இன்னும் பல்வேறு தேவைகள் இருக்கின்றன என்பது அரசுக்கு யார் நினைவூட்டுவார்கள் என்று தெரியவில்லை

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆஸ்துமா நோய்க்கு மருந்து கூட வாங்க முடியாமல் இருமி இருமியே தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
கொரோனா பலரது வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ளது. ரேஷனில் அரிசி, பருப்பு தருகிறோம், ரூ.1000ம் செலவுக்குத் தருகிறோம் இதைவிட வேறு என்ன வேண்டும் என்று அரசு கூறுகிறது. அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு உணவுத் தவிர இன்னும் பல்வேறு தேவைகள் இருக்கின்றன என்பது அரசுக்கு யார் நினைவூட்டுவார்கள் என்று தெரியவில்லை. இப்படி மருந்து வாங்க பணம் இன்றி கூலித் தொழிலாளி தன்னுடைய உயிரை இழந்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலிக்கு மூட்டைத் தூக்கி வந்தவர் ரவி (58). திருமணம் செய்து கொள்ளாமல் கிடைக்கும் வருமானத்துக்கு ஏற்ப வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆஸ்துமா தொந்தரவு வேறு இருந்தது. ஊரடங்கு காரணமாக வேலை இழந்த ரவி, தன்னார்வலர்கள் அளிக்கும் உணவால் பசியாறி வந்தார்.
உணவு கிடைத்தால் சாப்பாடு, இல்லாவிட்டால் பட்டினி என்று இருந்த ரவியால் ஆஸ்துமாவுக்கு மாத்திரை, மருந்து வாங்க முடியவில்லை. உடல் நிலை பாதிப்பு காரணமாக உணவு தேடி தன்னார்வலர்களையும் அணுக முடியவில்லை. இதனால், சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள தன்னுடைய சகோதரியின் வீட்டுக்கு சென்றால் உயிர் பிழைக்கலாம் என்ற நம்பிக்கையில் சென்றிருக்கிறார்.

coronavirus-image

இருமல், மூச்சுத் திணறலேடு வந்த ரவியை அக்கம்பக்கத்தினர் மட்டுமில்லாமல் சகோதரியும் ஏற்றுக்கொள்ளவில்லை. ரவியின் நிலையைக் கண்டு அஞ்சிய மக்கள் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து ரவியை ஆம்புலன்சில் அழைத்துச் சென்று அவருக்கு கொரோனா உள்ளதா என்று பரிசோதித்து, இல்லை என்றதும் ஜாபர்கான்பேட்டையில் கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். அவருக்கு ஆஸ்துமா பிரச்னைக்கு சிகிச்சை அளித்திருந்தால், தேவையான மாத்திரை மருந்துகளை கொடுத்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் அவர் உயிரோடு இருந்திருப்பார்.
ரவிக்கு கொரோனா இல்லை என்று அரசு கூறினாலும் மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதனால் வேறு வழியின்றி ஜாபர்கான்பேட்டையில் சாலையோரத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார் ரவி. உணவு, மருந்து இல்லாததால் இருமி இருமியே தன்னுடைய கடைசி மூச்சையும் விட்டுள்ளார் ரவி. சாலையில் ஒருவர் இறந்துகிடக்கிறார் என்று தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாத சம்பளம் பலருக்கும் நிறுத்தப்பட்டுள்ளது அல்லது மிகப்பெரும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு வாடகை முதல் வேறு சில அத்தியாவசிய தேவைகளுக்கான செலவு மட்டும் குறையவில்லை. வயதானவர்கள் உள்ள வீடுகளில் மாத்திரை மருந்துக்கே மாதந்தோறும் 5000, 10 ஆயிரம் செலவழிக்கும் நிலையில் ஊரடங்கு அவர்கள் வாழ்க்கைக்கு எல்லாம் முற்றப்புள்ளி வைக்க வந்துள்ளது என்பது அரசுக்கு யார் புரியவைப்பது? இன்னும் எத்தனை ரவிக்கள் இப்படி மருத்து, மாத்திரை இன்றி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அல்லல்படுகிறார்களோ!உஊ