கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது அரசின் கடமை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது அரசின் கடமை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில், வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக மாதம் ஒருமுறை சொந்த ஊரான சேலத்துக்கு செல்லும் முதல்வர், கொரோனா பரவலால் செல்லவில்லை. அதனால், இன்று காலை 8 மணிக்கு முதல்வர் சேலம் சென்றார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். 

ttn

அப்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், 9 பகுதிகள் தடை செய்யப்பட்டும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 7 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, சேலத்தில் 74 பெரிய கடைகள் மூலம் பொருட்களை டோர் டெலிவரி செய்யவும், 150 காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டு வருதாகவும் ஜவ்வசிரி ஆலைகள் செயல்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருதாகவும் கூறினார். 

மேலும், 20 ஆம் தேதி முதல் தொழிற்சாலைகள் இயக்குவது குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்றும் சீனாவில் 24,000 ரோபிட் கருவிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றுவது அரசின் பொறுப்பு என்றும் கூறினார்.