கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் செல்போனை பயன்படுத்திய செவிலியருக்கு கொரோனா!

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியின் செல்போனை பயன்படுத்திய செவிலியருக்கு கொரோனா!

ஆனால் தலைமை மருத்துவர்., மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முறையான உடை, கையுறை என கொரோனா தொற்று ஏற்படாதவாறே நடவடிக்கை எடுத்து வருகிறோம்

சீனாவின் வுகானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 200 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Docters

 ஹரியானாவில் 22 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவருக்கும் கொரோனா தாக்கியிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது பாதிக்கப்பட்டோரின் செல்போனை செவிலியர் பயன்படுத்தியுள்ளார். ஆனால் தலைமை மருத்துவர்., மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முறையான உடை, கையுறை என கொரோனா தொற்று ஏற்படாதவாறே நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால் அவருக்கு அப்படி ஏதும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் செல்போன்கள் மூலமாகவும் பரவும் என்பதால் கிருமி நாசினியைக் கொண்டு செல்போனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.