கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,333ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் புதிதாக 2,806 பேருக்கு கொரோனா உறுதி…

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,333ஆக உயர்ந்தது…. நேற்று மட்டும் புதிதாக 2,806 பேருக்கு கொரோனா உறுதி…

நம் நாட்டில் நேற்றும் மட்டும் புதிதாக 2,806 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,333ஆக உயர்ந்துள்ளது.

நம் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பார்க்கும் போது உள்ளுக்குள் கிலியை ஏற்படுத்துகிறது. நேற்று மட்டும் கொரோனா வைரஸால் புதிதாக 2,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  நேற்றுதான் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் எண்ணிக்கை முதல் முறையாக  3 இலக்கை தொட்டது. நேற்று மட்டும் கொரோனாவால் 199 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

இதனையடுத்து நம் நாட்டில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,333ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,688ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 13,991ஆக உயர்ந்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது வரை 28 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

நேற்று மட்டும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்கள்
மகாராஷ்டிரா    841 (15,525)
தமிழ்நாடு          508 (5,104)
குஜராத்              441 (6,245)
பஞ்சாப்              217 (1,451)
டெல்லி             206 (5,104)
(அடைப்பு குறியில் மொத்த எண்ணிக்கை)