கொரோனாவால் தொழில்கள் முடக்கம்: வங்கிக் கடனை ரத்து செய்ய சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

கொரோனாவால் தொழில்கள் முடக்கம்: வங்கிக் கடனை ரத்து செய்ய சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அனைத்துவிதமான வங்கிக் கடன்களை வசூலிப்பதை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அனைத்துவிதமான வங்கிக் கடன்களை வசூலிப்பதை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் பொருட்களின் தேவை குறைந்துள்ளது. எனவே, இந்தியாவில் விதிவிலக்கு இல்லாமல் எல்லா துறைகளிலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறார்கள். இந்த ஊழியர்கள், தொழில் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் எப்படி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியும். எனவே, இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து வங்கிக் கடன் மீதான அசல் மற்றும் வட்டி நிலுவைத் தொகை வசூலிப்பதை இந்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கியுள்ளன. மால்கள், திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வெளியே வரவே தயங்குகின்றனர். இதனால், சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கோரிக்கை எல்லோரின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. மக்களைக் காப்பாற்ற அரசு இந்த நடவடிக்கையை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.