கொரோனாவால் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி மனு : தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

 

கொரோனாவால் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி மனு : தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகத் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் வணிக வளாகங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாகத் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் வணிக வளாகங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக அரசு, மக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பீதியால் மால்கள், தியேட்டர்கள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஆனால், டாஸ்மாக்குகள் மட்டும் மூடப்படவில்லை. 

tt n

இந்நிலையில் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால் டாஸ்மாக்கை மூட உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் சூரிய பிரகாசம்  மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க டாஸ்மாக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, சுகாதாரமில்லாமல் டாஸ்மாக்குகள் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு எழுந்ததால் இதற்குத் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.