கொரோனாவால் சீனா மட்டுமின்றி தமிழக நெசவாளர்களும் கதறல் !

 

கொரோனாவால் சீனா மட்டுமின்றி தமிழக நெசவாளர்களும் கதறல் !

வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள நெசவாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ttn

குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்குக் கூட இந்த நோய் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. இந்த கொடிய வகை கொரோனா வைரஸால் பல நிறுவனங்கள் பாதிக்க பட்ட நிலையில் அதன் பெயர் “கொவிட்-19” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள நெசவாளர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ttn

சேலத்தில் மாம்பழம் எந்த அளவிற்குப் புகழ் பெற்றதோ அதே அளவிற்குப் புகழ் கொண்டது வெண்பட்டு வேட்டி. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த வேட்டிகள், புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 12 படிநிலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வெண்பட்டு வேட்டியைத் தயாரிக்க 10 நாட்கள் ஆகும். அதாவது, ஒரு வேட்டியைத் தயாரிக்க 10 நாட்கள் ஆகுமாம். முழுக்க முழுக்க கைத்தறி முறையிலேயே நெய்யப்படுவதால் இதன் மதிப்பு அதிகம் என்று நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தமிழகத்திற்கு மட்டுமல்லாது பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. 

ttn

இந்த பிரசித்தி பெற்ற வெண்பட்டு வேட்டியின் தயாரிக்க பயன்படும் மூலப் பொருள் பட்டுக் கூடும், அதிலிருந்து எடுக்கப்படும் பாவும் தான். இந்த பட்டுப் பாவு தமிழகத்தில் அவ்வளவாக இல்லாததால், சீனாவிலிருந்து 40 % இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

ttn

ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இப்போது 5% மட்டுமே இறக்குமதி  செய்யப்படுகிறது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலிருந்து பட்டுப்பாவு அதிக விலைக்கு வாங்கப்படுகின்றனவாம். இதனால், வெண்பட்டு வேட்டி விலை உயரலாம் என்று நெசவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.