கொரோனாவால் சரிந்த மல்லிகைப்பூ விற்பனை…நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!

 

கொரோனாவால் சரிந்த மல்லிகைப்பூ விற்பனை…நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியமான கடைகள் தவிர  பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியமான கடைகள் தவிர  பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதே போல, சத்தியமங்கலம் பூ சந்தையும் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள்  பூக்களை விற்க அனுப்பும் சந்தை மூடப்பட்டுள்ளதால், பூ பறிக்கும் பணி தற்போது நடைபெறவில்லை. அதனால் விவசாயிகள் மல்லிகை செடிகளை ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக விட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ttn

பொதுவாக கோடைகாலத்தில் மல்லிகை பூ விளைச்சல் நன்றாக இருக்கும். தற்போது தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து கோடைகாலம் நிலவுவதால், நாள் ஒன்றுக்கு 20 டன் மல்லிகை பூக்கள் பூப்பதாக விவாசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகை ரூ.250க்கு விற்கப்படும் பட்சத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் மல்லிகை பூ மட்டுமின்றி, அனைத்து பூக்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.