கொரோனாவால் சரிந்த தர்பூசணி வியாபாரம்.. பழங்கள் அழுகி வீணாக போவதால் வியாபாரிகள் வேதனை!

 

கொரோனாவால் சரிந்த தர்பூசணி வியாபாரம்.. பழங்கள் அழுகி வீணாக போவதால் வியாபாரிகள் வேதனை!

தமிழகத்தில் கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கடும் வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்கள் உண்ணுவது வழக்கம். அதனால் இந்த சீசன் காலத்தில் தர்பூசணி விற்பனை அதிக அளவில் நடக்கும். அதே போல இந்த ஆண்டும் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு தயாராக இருந்த போது, கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து விட்டது. இந்த கொடிய வைரஸில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். 

ttn

விற்பனைக்கு தயாராகி உள்ள பழங்களை மார்க்கெட்டுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகளும், மக்கள் நடமாட்டம் இல்லாததால் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டத்திலும் தர்பூசணி பழங்கள் சாலையோரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

ttn

அம்மாவட்டத்தின் பாவூர்சத்திரம் என்னும் பகுதியில் சாலையோரத்தில் தர்பூசணி விற்கும் கடை வைத்திருந்த வியாபாரி, தர்ப்பூசணி வியாபாரம் இந்த ஆண்டு கடும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், வெயில் காலத்தில் விற்பனை அதிகரிக்கும் தர்பூசணி இந்த ஆண்டு கொரோனாவால் விற்பனை நடக்கவில்லை என்றும் பழங்கள் அழகி வீணாக போவதால் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.