கொரோனாவால் களையிழந்த பங்குனி உத்திர விழா! பக்தர்கள் கலக்கம்!

 

கொரோனாவால்  களையிழந்த பங்குனி உத்திர விழா! பக்தர்கள் கலக்கம்!

பங்குனி உத்திர பெருவிழா  ஆண்டு தோறும் முருக பெருமான் கோயிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது

பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர பெருவிழா  ஆண்டு தோறும் முருக பெருமான் கோயிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழின் 12-வது மாதம் பங்குனியும்,12-வது நட்சத்திரம் உத்திரமும் சேரும் நாள் பங்குனி உத்திரம்.  இந்த நாளில் சந்திரன் முழு நிலவாக அற்புதமாகக் காட்சியளிப்பார் குறிப்பாக முருகனின் முக்கிய ஆலயங்களான பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட  ஸ்தலங்களில் பங்குனி உத்திர திருவிழா விசேஷமாக கொண்டாடப்படும்.  காரணம்  இன்று பல சுப நிகழ்வுகள் நடந்ததாக ஸ்தல புராணங்கள் கூறுகிறது. 

ttn

அதாவது இந்த நாளில் தான் பார்வதி திருமணம் நடந்தது, முருகன்-தெய்வானை கல்யாணம், ஐயப்பன் அவதரித்த நாள், மகாலட்சுமி அவதரித்த நாளாக கூறப்படுகிறது. இதனால் பங்குனி உத்திர விழா களைகட்டும். 

tt

இருப்பினும்  இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் களைஇழந்துள்ளது. எத்தனையோ ஆன்டுகளாக  நடந்து வரும் இந்த விழா இந்த ஆண்டு தடைபட்டுள்ளதை எண்ணி பக்தர்கள் கலங்கியுள்ளனர்.