கொரோனாவால் ஏற்பட்ட இழப்பு.. 1,100 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம்!

 

கொரோனாவால் ஏற்பட்ட இழப்பு.. 1,100 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம்!

இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியும் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இதனால் நான்காவது முறையாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில் நிறுவனங்கள் 50% பணியாட்களுடன் செயல்படலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கால் முடங்கிய பல தொழில்நிறுவனங்கள் அதன் இழப்பில் இருந்து மீள முடியாததால், அதனை சமாளிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அதே போல இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியும் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

ttn

இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க பணியாட்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் தற்போது இருப்பதாகவும், ஸ்விக்கியில் பணியாற்றும் 1,100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

மேலும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படுவதாகவும் ஸ்விக்கியில் பணியாற்றிய வருடங்களின் அடிப்படையில் அடுத்த ஒரு ஆண்டுக்கு ஒரு மாத ஊதியம் கொடுக்கப்படுவதாகவும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்துக்கு வரும் இந்த ஆண்டு முடியும் வரை மருத்துவக் காப்பீடு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க சொமேட்டோ நிறுவனமும் 13% ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.