கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடல் கடும் எதிர்ப்பிற்கு பிறகு அடக்கம்!

 

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடல் கடும் எதிர்ப்பிற்கு பிறகு அடக்கம்!

இதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உயிரிழந்தார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஐந்து செவிலியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், நேற்று மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உயிரிழந்தார். 

ttn

நரம்பியல் நிபுணரான அவர், சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருந்த போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு அப்பல்லோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து மருத்துவரின் உடலின் அடக்கம் செய்ய சுகாதார பணியாளர்கள் சென்றுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை அண்ணா நகர் வேலங்காடு பகுதி மக்கள் கற்கள், உருட்டுக் கட்டைகளால் ஆம்புலன்ஸ் டிரைவரையும் சுகாதார பணியாளரையும் தாக்கியுள்ளனர். அதன் பின்னர், அவரது உடல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்போடு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.