கொரோனாவால் உயிரிழந்தார் முன்னாள் நீதிபதி ஏ.கே திரிபாதி

 

கொரோனாவால் உயிரிழந்தார் முன்னாள் நீதிபதி ஏ.கே திரிபாதி

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்துள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்துள்ளது. 

இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு  37,776ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 951ல் இருந்து 10 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் பலியானோர் எண்ணிக்கையோ  1223ஆக அதிகரித்துள்ளது.

rr

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக லோக்பால் அமைப்பின் உறுப்பினரும், முன்னாள் நீதிபதியுமான ஏ.கே திரிபாதி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 62. சில நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்  சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். 

tt

டெல்லி சட்டக்கல்லூரியில் சட்டம் படித்த ஏ.கே திரிபாதி மத்திய அரசின் வரி சார்ந்த வழக்குகளை கவனிக்கும் சிறப்பு வழக்கறிஞராக வும், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.  கடந்த  2018ஆம் ஆண்டு சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவர் பொறுப்பு வகித்தது கவனிக்கத்தக்கது.