கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

 

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் குறுக்கிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நரம்பியல் நிபுணரான மருத்துவர் சைமன் ஹெர்குலஸ், கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் கடந்த 19-ஆம் தேதி உயிரிழந்தார்.

ttn

அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் அந்த கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் அடக்கம் செய்யவிடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் குறுக்கிட்டால் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.