கொரோனாவால் ஈரானில் இந்தியர் உயிரிழப்பு!

 

கொரோனாவால் ஈரானில் இந்தியர் உயிரிழப்பு!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.

coronavirus

பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்9 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் சுமார் ஆயிரத்து 284 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்த நிலையில் 18 ஆயிரத்து 407 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஈரானில் வாழும் இந்தியர்கள் சுமார் 255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஈரானில் வசித்துவந்த இந்தியர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.