கொரோனாவால் இன்டர்நெட் வேகமும் குறைந்தது! ப்ளீஸ் கம்மியா பயன்படுத்துங்க என கெஞ்சும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  

 

கொரோனாவால் இன்டர்நெட் வேகமும் குறைந்தது! ப்ளீஸ் கம்மியா பயன்படுத்துங்க என கெஞ்சும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது ஏற்படுத்தும் தாக்கத்தால் இணையதள வேகம் குறைந்து கொண்டே வருகிறது

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது ஏற்படுத்தும் தாக்கத்தால் இணையதள வேகம் குறைந்து கொண்டே வருகிறது

கொரோனா வைரஸ் பரவலால் வீட்டுக்குள் முடங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  எனவே பொழுதுபோக்கிற்காக இணைய தளத்தையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தே அலுவலக பணி புரிவதற்கும் இணைய தளம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

Internet
 
ஜஸ்ட் வாட்ச் என்ற சர்வதேச இணைய தள வேக ஆய்வு நிறுவனம் இந்தியாவில் இணையதள பயன்பாடு வழக்கத்தை விட 61% அதிகரித்துள்ளதாக வும் அமெரிக்காவில் 81% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உலகெங்கும் 10%-20% வரை இணைய தள வேகம் குறைந் துள்ளதாக ஊக்லா என்ற இணைய தள வேக மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இண்டெர்நெட்

அதிகரித்து வரும் டேட்டா தேவையை சமாளிக்க ஹாட்ஸ்டார், அத
நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள்  ஒளிபரப்புகளின் காட்சித் தரத்தை குறைக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 14 வரை 480 பிக்சல் என்ற காட்சித் தரத்தை மட்டுமே தங்கள் ஒளிபரப்புகள் கொண்டிருக்கும் என யூ டியூப் தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் களும் டேட்டா பயன்பாட்டை சமாளிக்கும் வகையில் ஹெச் டி,  அல்ட்ரா ஹெச் டி வகை ஒளிபரப்புகளை  நிறுத்தி சாதாரண தரத்திலான ஒளிபரப்பை மட்டுமே தரப் போவதாக தெரிவித்துள்ளன. அடுத்து வரும் வாரங்களில் இணைய தளத்தின் வேகம் மேலும் குறையக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையதள சேவையை குறைவாக பயன்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.