கொரோனா மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் உயிரிழந்த நிவாரண் 90 மேலாளருக்கு கொரோனா இருந்தது உறுதி!

 

கொரோனா மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் உயிரிழந்த நிவாரண் 90 மேலாளருக்கு கொரோனா இருந்தது உறுதி!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தப்பாடில்லை. கொரோனா வைரஸை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னையில் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு

சென்னை தி.நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமாரின் நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன்(47. இவர் புகழ்பெற்ற நிவாரண் 90, மருந்து கம்பெனி பொது மேலாளர். சளி, இருமல் உள்ளிட்டவற்றுக்கு சிவநேசன் கண்டுபிடித்த மருந்துகள் நல்ல பலன் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனால் இவர் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அவரது நண்பரான டாக்டர் ராஜ்குமாருடன் இணைந்து நேற்று கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்துள்ளனர் சோதனை முயற்சியாக, சிவநேசன் நைட்ரேட் கரைசலை குடித்துள்ளார். உடனே, சிவநேசன் மயங்கி விழ டாக்டர் ராஜேந்திரன் அவரை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். எந்த மருந்து தயாரித்தாலும், அதை சிவநேசன்தான் உட்கொண்டு சுயபரிசோதனையில் ஈடுபடுவது வழக்கமாம். எனவே இந்த மருந்தையும் உட்கொண்டு, ராஜ்குமாருக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையின்போது சிவநேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவர் ராஜ்குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த சிவநேசனுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.