கொரில்லா நடித்துள்ள ஜீவா படம் வெளியாவதில் சிக்கல்…களம் இறங்கிய பீட்டா…

 

கொரில்லா நடித்துள்ள ஜீவா படம் வெளியாவதில் சிக்கல்…களம் இறங்கிய பீட்டா…

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தாங்கள் எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல் ‘கொரில்லா’ படக்குழுவினர் உயிரோடு இருக்கும் சிம்பன்சியை நடிக்கவைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தாங்கள் எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல் ‘கொரில்லா’ படக்குழுவினர் உயிரோடு இருக்கும் சிம்பன்சியை நடிக்கவைத்து சித்திரவதை செய்துள்ளனர். எனவே அப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று பீட்டா அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.

gorilla

ஜீவா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘கொரில்லா’, இதில் ‘காங்’ என்னும் கதாபாத்திரத்தில் சிம்பான்சி குரங்கு ஒன்று நடித்துள்ளது. இந்த நிலையில் சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிஜ சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்றும் பீட்டா இந்தியா அமைப்பு படக்குழுவினரை அறிவுறுத்தியிருந்தது.

 

இதற்கான காரணங்களை வெளியிட்ட பீட்டா அமைப்பு, விலங்குகளைத் திரைப்படங்களில் பயன்படுத்துவது தேவையற்றது. இதன் காரணமாக விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு எப்போதும் இருக்கும் என பீட்டா அமைப்பு பட்டியலிட்டுக் கூறியுள்ளது. உயிருடன் இருக்கும் விலங்குகளைப் பயன்படுத்துவது தேவையில்லாதது. மாபெரும் வெற்றிப் படங்களான ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ போன்றவற்றில் நிஜ விலங்குகளைப் பயன்படுத்தாமல் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்தினார்கள். சிம்பன்சி குரங்குகளைத் தவறாகச் சித்திரிப்பது அவற்றின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gorilla

டான் சாண்டி இயக்கும் இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். சதீஷ், ராதாரவி, யோகி பாபு போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்திற்கு சுமார் 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்த சிம்பன்சியாருக்கு தலா ஒரு நாளைக்கு 2.50 லட்சம் வீதம் 1.5 கோடி சம்பளம் தரப்பட்டதாம்.