கொரானோ நிவாரண நிதி கொடுங்கள் – மக்களிடம் தமிழக அரசு வேண்டுகோள்

 

கொரானோ நிவாரண நிதி கொடுங்கள் – மக்களிடம் தமிழக அரசு வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை தொடர்ந்து பொதுமக்கள் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை: கொரோனா பாதிப்பை தொடர்ந்து பொதுமக்கள் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. மேலும் மதுரையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எந்தளவு உள்ளது என்பது தொடர்பான தகவல்களை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். சுமார் 3018 வென்டிலேட்டர் சாதனங்களும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சுமார் 13 ஆயிரம் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ttn

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்களால் எவ்வளவு நிதி கொடுக்க முடியுமோ அவ்வளவு தரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுமக்கள் அளிக்கும் நிவாரண நிதி மூலம் வருமான வரி சட்டம் பிரிவு 80 (g)-ன் கீழ் 100 சதவீத வரி விலக்கு பெற முடியும்.

மேலும் நிவாரண தொகையை தமிழக முதல்வரிடமோ அல்லது அரசு அலுவலர்களிடமோ நேரடியாக வழங்க வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் ரூ.10 லட்சத்திற்கு மேல் உதவி செய்பவர்கள், நிறுவனங்களின் பெயர்கள் நாளிதழ்களில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை செயலகம், சென்னை, 600009. சேமிப்பு கணக்கு எண்:  117201000000070, IFSC:IOBA0001172 என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.