‘கொரானா நேரத்துல ஒரு டாக்டரே இப்படி டச் பண்ணலாமா’- தள்ளி போக சொன்ன பார்மசிஸ்ட்க்கு நேர்ந்த கதி …

‘கொரானா நேரத்துல ஒரு டாக்டரே இப்படி டச் பண்ணலாமா’- தள்ளி போக சொன்ன பார்மசிஸ்ட்க்கு நேர்ந்த கதி …

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மருத்துவமனையின் ஜூனியர் டாக்டர்களை சமூக இடைவெளியினை பின்பற்ற சொன்னதால் மருத்துவமனையின் தலைமை மருந்தாளரையும் அவரது துணை அதிகாரிகளையும் டாக்டர்கள் தாக்கினார்கள். 

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மருத்துவமனையின் ஜூனியர் டாக்டர்களை சமூக இடைவெளியினை பின்பற்ற சொன்னதால் மருத்துவமனையின் தலைமை மருந்தாளரையும் அவரது துணை அதிகாரிகளையும் டாக்டர்கள் தாக்கினார்கள். 
செவ்வாயன்று பஹ்ரைச் மருத்துவமனையின் தலைமை மருந்தாளர் வீரேந்திர சிங் அவரின் அறையிலிருந்த போது டாக்டர் ஹஷ்மத் அலி, டாக்டர் விந்தியவாசினி மற்றும் டாக்டர் அமித் குமார் சுக்லா ஆகியோர் அறைக்குள் நுழைந்தனர். அப்போது அவர்களிடம் மருந்தாளர் விரேந்திரசிங் சமூக தூரத்தை கடைபிடிக்குமாறு சொன்னார்.

doctors-54

இதனால் கோபமடைந்த டாக்டர்கள் அறையை விட்டு வெளியேறிய பின்னர் மற்ற மருத்துவர்கள் குழுவுடன் திரும்பி வந்து அவரையும் அவரது ஜூனியர்களையும் தாக்கினர். அப்போது மற்ற மருந்தாளுநர் திலீப் குமார் மற்றும் தொழிலாளி ஷகீல் அகமது ஆகியோர் அவரைக் காப்பாற்றினர். உடனே தலைமை மருந்தாளர்  தாக்குதல் பற்றிய செய்தி மருத்துவமனையில் பரவியதால் மற்ற ஊழியர்கள் வேலைகளை புறக்கணித்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். 
இதற்கிடையில், போலீஸ்  அதிகாரிகள் தாங்கள் இந்த சம்பவம் பற்றி ஒரு புகாரை பெற்றுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.