கொரானா காரணமாக வீட்டில் உள்ளீர்களே… ராமாயணத்தைப் பாருங்கள்! -பிரசார் பாரதி

 

கொரானா காரணமாக வீட்டில் உள்ளீர்களே… ராமாயணத்தைப் பாருங்கள்! -பிரசார் பாரதி

80ஸ் கிட்ஸின் முக்கிய தொலைக்காட்சி பொழுதுபோக்கு ராமாயணம். துளசி தாசரின் ராமசரித மானஸை ஒட்டி ராமானந்த சாகர் என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்ட ராமாயணம் 80களின் இறுதியில் வெளியாக மிகப்பிரபலம் ஆனது. இதில் ராமர், சீதையாக நடித்த நடிகர்களுக்கு அந்த காலத்தில் விசிறிகள் அதிகம்.

80ஸ் கிட்ஸின் முக்கிய தொலைக்காட்சி பொழுதுபோக்கு ராமாயணம். துளசி தாசரின் ராமசரித மானஸை ஒட்டி ராமானந்த சாகர் என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்ட ராமாயணம் 80களின் இறுதியில் வெளியாக மிகப்பிரபலம் ஆனது. இதில் ராமர், சீதையாக நடித்த நடிகர்களுக்கு அந்த காலத்தில் விசிறிகள் அதிகம். அதிலும் சீதையாக நடித்த தீபிகா பா.ஜ.க சார்பில் எம்.பி-யாக நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு எத்தனையோ ராமாயணம், மகாபாரத கதைகள் வந்தாலும் 1980களில் இறுதியில் வெளியான ராமாயணம் அளவுக்கு ஸ்வாரஸ்யமாக இருந்தது இல்லை. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் ராமானந்த சாகரின் ராமாயணம் தொடரை தூர்தர்ஷன் மீண்டும் ஒளிபரப்ப உள்ளது.

ramayan

நாளை (மார்ச் 28) முதல் தினமும் காலை 9-10 மணி வரையிலும் அதே போல் இரவு 9 முதல் 10 மணி வரையிலும் ராமாயணம் தொடரை ஒளிபரப்ப உள்ளதாக பிரசார் பாரதி தெரிவித்துள்ளது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நாடகத்தை தூர்தர்ஷனின் டிடிநேஷனலில் ஒளிபரப்ப உள்ளதாக பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.