கொரானாவை விட  வேகமாக  பரவும் வதந்திகள் -வைரஸ் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை ..

கொரானாவை விட  வேகமாக  பரவும் வதந்திகள் -வைரஸ் பற்றி வதந்தி பரப்பினால் நடவடிக்கை ..

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பரவி வருவதால், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள்  வழியாக ஏராளமான தவறான தகவல்கள் பரவி வருகின்றன. கொரானா வைரஸால்  அனைத்து கடைகளும் மூடப்பட்டிருப்பது குறித்து சென்னையில் வேகமாக வைரசை போல வதந்திகளும் பரவி வருகிறது. 

இந்த விஷயத்தை அறிந்த  அதிகாரிகள் இந்த வதந்திகள் சென்னையில் பீதி மற்றும் பதுக்கல் பரவ வழிவகுக்கும் என்பதால்  இந்த வதந்திகளை அகற்ற அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.

corona

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக மார்க்கெட்டுகள் மற்றும் சிறு கடைகள் மூடப்படும் என்ற வதந்திகள் குறித்த சென்னை கார்ப்பரேஷன் அறிக்கை கீழே உள்ளது:

மால்கள், தியேட்டர்கள் போன்ற நிறுவனங்கள் தவிர, பழங்கள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் சந்தைகள் போன்ற பிற கடைகள் திறந்திருக்கும், மேலும் அனைத்து சிறிய கடைகள், சிறு வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை திறந்திருக்கும்.

corona

இது வைரஸ் பரவுவதைத் தடுக்குமே  தவிர, சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்காது.
இத்தகைய வதந்திகள் குற்றமாக கருதப்படும், மேலும் இப்படி வதந்தியை  பரப்புபவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .