கொரானாவுக்கு பயந்து 5800 குற்றவாளிகளை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட அமைச்சர்! – பஞ்சாபில் அதிர்ச்சி

கொரானாவுக்கு பயந்து 5800 குற்றவாளிகளை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட அமைச்சர்! – பஞ்சாபில் அதிர்ச்சி

கொரோனா பீதி காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட 3000க்கும் மேற்பட்ட சிறிய குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய பஞ்சாப் மாநில சிறைத்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனா பீதி காரணமாக வெளிநாடுகளில் சிறைச் சாலையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கொரோனா பீதி காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட 3000க்கும் மேற்பட்ட சிறிய குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய பஞ்சாப் மாநில சிறைத்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனா பீதி காரணமாக வெளிநாடுகளில் சிறைச் சாலையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அது இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை வெளியாகி உள்ள நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

virus

இந்த நிலையில் பஞ்சாப் மாநில சிறைத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.ரண்வா 5000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பஞ்சாப் சிறையில் உள்ள 2800க்கும் மேற்பட்ட பிக்பாக்கெட், நகை பறிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், குறைந்த அளவில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 3000ம் பேரையும் விடுதலை செய்யலாமா என்று பரிசீலித்து வருகிறோம். இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

jail

ஆனால், அமைச்சரின் இந்த கருத்துக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால் மாநிலத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அமைச்சரின் கருத்து பற்றி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் சிறைச்சாலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியும் விரைவாக நடந்து வருகிறது” என்றார்.