கொரானாவின் கோரத்தாண்டவம் -75 மாவட்டங்களை முழுமையாக மூட முடிவு …

 

கொரானாவின் கோரத்தாண்டவம் -75 மாவட்டங்களை முழுமையாக மூட முடிவு …

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவியுள்ள 75 மாவட்டங்களை முழுமையாக அடைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மார்ச் 31 வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவியுள்ள 75 மாவட்டங்களை முழுமையாக அடைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். மார்ச் 31 வரை மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர் மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

vijayawada

கொடிய கொரானாவின் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, மார்ச் 31 ஆம் தேதி வரை, மாநிலங்களுக்கு இடையேயான  போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான அவசர தேவை இருப்பதாக கூட்டத்தில்  ஒப்புக் கொள்ளப்பட்டது.

lockdown

சமீபத்தில் இரண்டு வெவ்வேறு ரயில்களில் பயணம் செய்த 12 பேர், கொரோனா வைரஸ் பாசிட்டிவ் முடிவு வந்துள்ளதாக  ரயில்வே அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 12 பயணிகளில் 8 பேர் மார்ச் 13 ஆம் தேதி டெல்லியில் இருந்து ராமகுண்டம் வரை ஏபி சம்பர்க் கிரந்தி எக்ஸ்பிரஸில் பயணம் செய்திருந்தாலும், நான்கு பேர் மார்ச் 16 அன்று மும்பையிலிருந்து ஜபல்பூர் வரை கோதன் எக்ஸ்பிரஸில் பயணம் செய்திருந்தனர்.
அடைப்பு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவை.